தூக்கும்போதே பிரிந்த உயிர்! புகழ்பெற்ற ஜேம்ஸ் பாண்டு பட நடிகர் காலமானார்! பிரபலங்கள் - ரசிகர்கள் இரங்கல்!

தூக்கும்போதே பிரிந்த உயிர்! புகழ்பெற்ற ஜேம்ஸ் பாண்டு பட நடிகர் காலமானார்! பிரபலங்கள் - ரசிகர்கள் இரங்கல்!


james-pandu-actor-dead

உலக அளவில் புகழ்பெற்று, ஹாலிவுட் ரசிகர்களை பெருமளவில் கவர்ந்த திரைப்படங்களில் மிகவும் முக்கியமானது ஜேம்ஸ் பாண்ட். இத்திரைப்படத்திற்கென  ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.  மேலும்  இதுவரை 24 ஜேம்ஸ் பாண்ட் படங்கள் வந்துள்ளன. 

 இதில் முதன்முறையாக ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகர் ஷான் கானரி.  இவர் 7 ஜேம்ஸ் பாண்ட் படங்களில் நடித்துள்ளார். ஸ்காட்லாந்தில் பிறந்த அவர் தொடர்ந்து பல வெற்றி திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் பல படங்களுக்கு ஏராளமான விருதுகளையும் வென்றுள்ளார். 

James pant

இந்நிலையில் அவர் 2007 ஆம் ஆண்டு நடிப்பிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். மேலும் அவர் கடந்த ஆகஸ்ட் மாதம் தனது 90ஆவது பிறந்தநாளை கொண்டாடினார். இந்த நிலையில் அவர் இன்று உயிரிழந்துள்ளார். மேலும் அவரது உயிர் தூக்கத்திலேயே பிரிந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ரசிகர்கள் மற்றும் திரைப்பிரபலங்கள் பலரும் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.