சினிமா

பிரபல நடிகையுடன் விரைவில் திருமணமா? உண்மையைப் போட்டுடைத்த நடிகர் ஜெய்! அதிர்ச்சியில் ரசிகர்கள்!

Summary:

jai talk about love with annjali

தமிழ் சினிமாவில் தளபதி விஜய் நடித்த பகவதி படத்தில் அவருக்கு தம்பியாக நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை ஜெய்.இப்படத்தில் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததை தொடர்ந்து அவர் சென்னை 28 படத்தில் ஹீரோக்களில் ஒருவராக நடித்தார். அதனைத் தொடர்ந்து அவருக்கு ஏராளமான பட வாய்ப்புகள் குவிந்தது. மேலும் அவர் நடித்த எங்கேயும் எப்போதும் திரைப்படம் பெருமளவில் வெற்றி பெற்றது. 

அதனை தொடர்ந்து ஜெய் தனக்கு ஜோடியாக நடித்த நடிகை அஞ்சலியை காதலிப்பதாக தகவல்கள் பரவி வந்தது. மேலும் அவர்களும் ஒன்றாக வெளியில் சுற்றுவது,  சமூக வலைதளங்களில் புகைப்படங்களை வெளியிடுவது என இருக்கவும் ரசிகர்கள் அதனை முழுமையாக நம்ப துவங்கினார்.

jai with anjali க்கான பட முடிவு

 இந்நிலையில் தயாரிப்பாளர் ஒருவர் கொடைக்கானல் படப்பிடிப்பின்போது ஜெய் மற்றும் அஞ்சலி இருவரும் யாரிடமும் சொல்லாமல் வெளியே சென்றதாகவும் புகார் அளித்திருந்தார் அதுமட்டுமின்றி ஜெய் மற்றும் அஞ்சலி இருவரும் ஒரே வீட்டில் ஒன்றாக வசித்து வருவதாகவும் விரைவில் இருவரும் திருமணம் செய்து கொள்ள உள்ளதாகவும் தகவல்கள் பரவி வந்தது. 

இந்நிலையில் நடிகர் ஜெய் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் எனக்கும் அஞ்சலிக்கும் நல்ல புரிதல் உள்ளது.மேலும் என்னையும் அஞ்சலியையும் இணைத்து பல செய்திகள் தவறாக வந்து கொண்டிருக்கிறது. எனக்கு அஞ்சலியை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் அதை மறைக்க மாட்டேன் நான் அஞ்சலியை காதலிக்கவில்லை அவரை திருமணம் செய்து கொள்ளும் எண்ணமும் இல்லை என்று கூறியுள்ளார். 
 


Advertisement