சூர்யாவின் பிறந்தநாளன்று சூப்பரான ட்ரீட் கொடுத்த ஜோதிகா.! செம உற்சாகத்தில் ரசிகர்கள்!! வீடியோ இதோ..jackpot  movir trailer released

தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து ஏராளமான வெற்றிப்படங்களை கொடுத்தவர் நடிகை ஜோதிகா. இவருக்கென ஏராளமான ரசிகர் பட்டாளமே உள்ளது. இந்நிலையில் ஜோதிகா நடிகர் சூர்யாவை திருமணம் செய்துகொண்டு, சினிமாவாழ்க்கையில் இருந்து விலகி இருந்தார்.

இதனை தொடர்ந்து மீண்டும் சினிமாத்துறையில் களமிறங்கிய ஜோதிகா 36 வயதினிலே, மகளிர் மட்டும், நாச்சியார், காற்றின் மொழி என கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

surya

இதனை தொடர்ந்து  நடிகை ஜோதிகா நடித்த 'ராட்சசி' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அவர் தற்போது 'ஜாக்பாட் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். ஜாக்பாட் திரைப்படம் சென்சாரில் 'யூ' சர்டிபிகேட் பெற்றுள்ளது.இந்த நிலையில் இந்த படம் வெளியிடுவதற்கான  புரமோஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் சூர்யாவின் பிறந் நாளை முன்னிட்டு ஜோதிகாவின் 'ஜாக்பாட்' திரைப்படத்தின் டிரைலர் இன்று வெளியாகியுள்ளது.இதில் ஜோதிகா போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் இவருடன் ரேவதி, யோகிபாபு, மன்சூரலிகான், ஆனந்தராஜ், உள்பட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தை சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.மேலும்  இந்த படத்தை கல்யாண் இயக்கியுள்ளார். இந்நிலையில் ட்ரைலர் இன்று வெளியாகி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.