சினிமா

இந்த வெற்றிகளுக்கு அவர் தகுதியானவர்! ஐஸ்வர்யா ராய் வியந்து பாராட்டியது யாரை தெரியுமா?

Summary:

ishwariya rai

இந்திய அளவில் பிரபலமான நடிகை, உலக அழகி என மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ஐஸ்வர்யா ராய். 45 வயதை கடந்த இவர் சில வருடங்களுக்கு முன்பு பிரபல நடிகர் அபிஷேக் பச்சனை திருமணம் செய்துகொண்டார்.

1994 இல் உலக அழகியாகத் தேர்வு செய்யப்பட்டவர். இந்தி, தமிழ், பெங்காலி, ஆங்கிலமொழிப் படங்களில் நடித்து வருகிறார். மணிரத்னத்தின் இருவர் படத்தில் அறிமுகமானார். இவர் 2007 ஆம் ஆண்டு அபிஷேக் பச்சனைத் திருமணம் செய்துக்கொண்டார். 

ajith and aishwarya rai க்கான பட முடிவு

இந்நிலையில் சென்னையில் நடந்த விழா ஒன்றில் கலந்து கொண்ட நடிகை ஐஸ்வர்யா ராய்,நடிகர் அஜீத்குமாரை புகழ்ந்து பேசியுள்ளார்.அவர் கூறுகையில், ‘அவர் மிகவும் இரக்க குணம் உள்ளவர் மற்றும் அவரது தொழிலில் நிபுணராகவும் உள்ளார். அவரது வெற்றிகளைக் கண்டு நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.

ரசிகர்களிடம் இருந்து அவர் அன்பை பெறுகிறார். அதற்கு அவர் தகுதியானவர்.கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்தில் அவருடன் அதிக காட்சிகளில் நான் நடிக்கவில்லை.

ஆனால் மீண்டும் ஒரே பாதையில் இருவரும் சந்திக்க நேரிட்டால், தகுதியான வெற்றியை அவர் பெற்றதற்கு நான் வாழ்த்த விரும்புகிறேன்’ என தெரிவித்துள்ளார். 


Advertisement