600 ரூபாய் பணம் இல்லாமல் கஷ்டப்பட்ட மறைந்த நடிகர் இர்பான் கான்.! கோடிகளில் சம்பளம் வாங்கியவரின் சோக பின்னணி.!

பாலிவுட் சூப்பர் ஸ்டார் நடிகர்களில் ஒருவரான இர்பான் கான் பெருகுடலில் ஏற்பட்ட தொற்று காரணமாக தனது 54 வயதில் இன்று காலமானார்.
ஜுராசிக் வேர்ல்ட், தி ஜங்கிள் புக், தி அமேஸிங் ஸ்பைடர்மேன், லைஃப் ஆஃப் பை, ஸ்லம்டாக் மில்லியனர் என உலக புகழ்பெற்ற படங்களில் நடித்துள்ளார் இர்பான் கான். இவர் நடித்த பான் சிங் டோமர் படத்துக்காக தேசிய விருதையும் பெற்றுள்ளார்.
பாலிவுட், ஹாலிவுட் என உலகளவில் புகழ்பெற்று, கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கிவந்த இர்பான் கான் தனது சிறு வயதில் 600 ரூபாய் பணம் இல்லாததால் தனது கிரிக்கெட் கனவை இழந்துவிட்டதாக இறப்பதற்கு முன் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
இதுபற்றி கூறியுள்ள அவர், நான் சிறப்பாக கிரிக்கெட் விளையாடுவேன். நான் ஒரு சிறந்த கிரிக்கெட் வீரராகவே ஆசைப்பட்டேன். ஜெய்பூர் அணியின் இளம் ஆல்ரவுண்டராக திகழ்ந்த நான், சி.கே. நாயுடு கிரிக்கெட் போட்டிக்கு தேர்வாகினேன். ஆனால் அந்த போட்டிக்கு செல்ல 600 ரூபாய் பணம் தேவைப்பட்டது. யாரிடம் அந்த பணத்தை கேட்பது என்றும் தெரியவில்லை.
என்னால் அந்த நேரத்தில் 600 ரூபாய் கூட திரட்ட முடியவில்லை. கிரிக்கெட்டை கைவிடுவது என அப்போதுதான் முடிவெடுத்தேன். அந்த நேரத்தில் என்னிடம் 600 ரூபாய் பணம் இருந்திருந்தால் நான் இன்னேரம் கிரிக்கெட் வீரராக இருந்திருப்பேன் என கூறியுள்ளார்.