சினிமா

"கிரேன் என் மேல் விழுந்திருக்கலாமே" - படபிடிப்பில் ஏற்பட்ட விபத்து குறித்து சங்கர் பதிவு

Summary:

Indian2 shanker

பிரமாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் படம் இந்தியன்-2. இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை பூந்தமல்லியில் ஈவிபி பிலிம் சிட்டியில் நடைபெற்றுவந்தது, இந்த படப்பிடிப்பின்போது செட் அமைக்கும் பணி நடைபெற்ற நிலையில் ராட்சச கிரேன் அறுந்து விழுந்து உதவி இயக்குனர் உட்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

 படப்பிடிப்பில், கமல், இயக்குனர் சங்கர், நடிகை காஜல் அகர்வால் அனைவரும் இருந்துள்ளனர். இது படப்பிடிப்பில் உள்ள அனைவருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. படப்பிடிப்பில் நடைபெற்ற இந்த கோர விபத்தை பற்றி வாய் திறக்காமல் இருந்த சங்கர் அவர்கள் தற்போது தனது வருத்தத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

அதில் மிகுந்த வருத்தத்துடன் ட்வீட் செய்கிறேன். இந்த விபத்து எனக்கு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. மேலும் விபத்து நடந்த நாள் முதல் நான் இன்னும் அதிர்ச்சியில் இருக்கிறேன். எனது உதவி இயக்குநர், குழுவைச் சேர்ந்தவர்களின் மரணத்தை நினைத்து தூக்கம் வருவதில்லை.

நூலிழையில் அந்த கிரேன் விபத்திலிருந்து தப்பித்தேன். ஆனால் அது என் மீது விழுந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று நினைக்கிறேன். அந்த குடும்பங்களுக்கு என் மனமார்ந்த இரங்கல் மற்றும் பிரார்த்தனைகள்" என்று சங்கர் குறிப்பிட்டுள்ளார். 

 


Advertisement