சினிமா

இம்சை அரசன் இரண்டாம் பாகத்தில் யோகி பாபுவா? வடிவேலா? உறுதி படுத்திய படக்குழு!

Summary:

Imsai arasan 24 aam pulikesi movie update

இயக்குனர் சங்கர் தயாரிப்பில், இயக்குனர் சிம்புதேவன் இயக்கத்தில், வடிவேலு நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படம் இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி. ஒருசில காரணங்களால் நடிகர் வடிவேலு சினிமாவை விட்டு ஒதுக்கிவிட்டார். தற்போது ஒருசில படங்களில் மட்டும் நடித்துவரும் நிலையில் இம்சை அரசன் 23 ஆம் புலிகேசியின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாக செய்திகள் வந்தது.

இதனை அடுத்து இம்சை அரசன் 24 ஆம் புலிகேசி என்று பெயரில் வடிவேலுவை வைத்து படப்பிடிப்பு தொடங்கப்பது. ஆனால், ஒருசில காரணங்களால் வடிவேலு இந்த படத்தில் பாதியில் இருந்து விலகினார். அதன்பின்னர் படக்குழு தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுத்தது. இதனை தொடர்ந்து பேச்சுவார்த்தை முடிந்துவிட்டது, விரைவில் வடிவேலு படத்தில் நடிப்பார் என கூறப்பட்டது.

இந்நிலையில் இந்த படத்தில் வடிவேலுக்கு பதில் யோகிபாபு நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகின. ஆனால் தற்போது படக்குழு தரப்பில் இது முற்றிலும் வதந்தி, வடிவேலு இப்படத்தில் நடிக்க ஒப்பு கொண்டு விட்டார். படப்பிடிப்பு தொடர்பான பேச்சு வார்த்தை நடந்து கொண்டு வருகிறது என விளக்கமளித்துள்ளனர்.


Advertisement