இளையராஜா என்ற பெயர் இப்படித்தான் வந்தது! இசைஞானி விளக்கம்!

இளையராஜா என்ற பெயர் இப்படித்தான் வந்தது! இசைஞானி விளக்கம்!


Ilaiyaraaja talks about his early life and name meaning

இசைஞானி இளையராஜா அவர்கள் தற்போது ஒவொரு கல்லூரிக்கும் சிறப்பு விருந்தினராக சென்று வருகிறார். அந்த வகையில் இன்று சென்னையில் உள்ள பிரபல தனியார் மகளீர் கல்லூரியான எத்திராஜ் கல்லூரியில் நடந்த விழாவில் இசைஞானி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு மாணவிகள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளித்தார்.

அவரது ஆரம்ப கால வாழ்க்கை பற்றி கூறிய இளையராஜா, நான் சென்னைக்கு வரும்போது என் கையில் சுத்தமா காசு கிடையாது. காசு இல்லாமல் சென்னைக்கு சென்று என்ன செய்வாய் என்று என் தாய் என்னிடம் கேட்டார். ஏதாவது லைட் மியூசிக்கில் வாசித்து சம்பாதிப்பேன் என்றேன். அதும் கிடைக்கவில்லை என்றால் என்ன செய்வாய் என்று கேட்டார். பிளாட்பாரத்தில் உட்கார்ந்து வாசிப்பேன் கிடைக்கும் என்றேன்.

Ilaiyaraja

கையில் எதுவுமே இல்லாமல், நம்பிக்கையை மட்டுமே வைத்துக்கொண்டு வந்தேன். எனது இந்த வளர்ச்சிக்கு எனது நம்பிக்கை ஓன்று மட்டுமே காரணம். எனவே எதற்காகவும் நம்பிக்கையை மட்டும் விட்டுவிடாதீர்கள் என்று இளையராஜா கூறினார்.

மேலும் பேசிய அவர் தனக்கு இளையராஜா என்ற பெயர் எப்படி வந்தது என்பது பற்றியும் கூறினார். எங்கள் அப்பா எனக்கு ராஜய்யா, ஞானதேசிகன் என்று இரண்டு பெயர் வைத்தார். ஞானதேசிகன் என்பதை என் ஜாதகம் பார்த்து வைத்தார். பள்ளியில் சேர்க்கும் போது சுருக்கமாக இருக்க வேண்டும் என்று ராஜய்யா என வைத்தார். சென்னைக்கு வந்தவுடன் ஆர்மோனியத்தை எடுத்துக் கொண்டு தன்ராஜ் மாஸ்டரிடம் வெஸ்டர்ன் மியூசிக் கற்றுக்கொள்ளச் சென்றேன்.

Ilaiyaraja

மாஸ்டர் என்னிடம் உனது பெயர் என்ன என்று கேட்டார். ராஜய்யா என்றேன். இந்த பெயர் சரி இல்லை எனவே உனது பெயரை ராஜா என வைத்துக்கொள் என்றார். நானும் சம்மதித்தேன். பின்னர் இசை அமைப்பாளராக ஆனவுடன் என் பாடல்களுக்காக ஒரு கதையை உருவாக்கி ‘அன்னக்கிளி’ என்ற படம் எடுத்தார் பஞ்சு அருணாச்சலம்.

அந்த சமயத்தில் ஏற்கனவே ராஜா என்ற பெயரில் ஒரு இசையமைப்பாளர் இருப்பதால் இளையராஜா என்று வைச்சுக்கோ என்றார். அப்படித்தான் இளையராஜா என்ற பெயர் வந்தது என்று தனது வாழ்க்கை பற்றி கூறியுள்ளார் இளையராஜா.