எனக்கும் இந்த சம்பவத்துக்கும் எந்தவித தொடர்பும் இல்லை..! பிரபல நடிகை பேட்டி..!

நடிகை நிலானி எனக்கும் உதவி இயக்குனர் காந்தி லலித்குமார்
செய்துகொண் அந்த தற்கொலைக்கும் எந்த ஒரு சம்மந்தமும் இல்லை என்று கூறியுள்ளார்.
தற்கொலை செய்து கொண்ட உதவி இயக்குனர் காந்தி லலித்குமார் திருவண்ணா மலையை சேர்ந்தவர். இவர் கடந்த வாரம் ஞாயிற்றுக் கிழமை அன்று சென்னையில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார்.
இந்த காந்தி லலித்குமார் சின்னத்திரை நடிகையான நடிகை நிலானி என்பவரை காதலித்து வந்துள்ளார். மேலும் இந்த சின்னத்திரை நடிகை நிலானியின் பிரிவை தாங்கிக் கொள்ள முடியாததால் அவர் தற்கொலை செய்து கொண்டார் என தகவல் வெளியானது.
இந்த சூழ்நிலையில் நடிகை நிலானி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு கொடுத்துள்ளார். அந்த மனுவில் தன் மீது யாரும் வந்து புகார் கொடுக்கவில்லை என்றும் அந்த தற்கொலைக்கும் எனக்கும் எந்த ஒரு தொடர்பும் இல்லை என தெரிவித்தார்.
நான் முதலில் அவரை திருமணம் செய்து கொள்ள நினைத்தது உண்மை தான் எனவும் பின்பு அவர் பல பெண்களுடன் தொடர்பு வைத்திருந்ததால் நான் அவரை விட்டு விலகியதாகவும் கூறியுள்ளார். அவரை விட்டு நான் விலகிய பின்பு கடந்த 2 மாத காலமாக என்னை அடித்து துன்புறுத்தினார் எனவும் கூறியுள்ளார்.