கழுத்தை நெரித்து கொள்ளும்போது சத்தம் போடவே இல்ல ஷார்..! ஆத்திரத்தில் மனைவி கூறியதை அப்டியே செய்த கணவன்..!

சென்னை மதுரவாயல், கன்னியப்ப முதலி தெருவைச் சேர்ந்தவர் ஜெயவேல் (38). இவரது மனைவி திலகம் (37). 13 வருடத்திற்கு முன்பு திருமணம் ஆன இவர்களுக்கு 12 வயதில் ஒரு மகனும், 11 வயதில் ஒரு மகளும் உள்ளனர். ஜெயவேல் சொந்தமாக லோடு ஆட்டோ ஒன்றை ஓட்டி வந்துள்ளார்.
இந்நிலையில் இவர்கள் இதுக்கு முன்னர் தங்கியிருந்த வீட்டிற்கு திலகத்தின் தோழி ஒருவர் அடிக்கடி வந்த நிலையில் அந்த தோழிக்கும், ஜெயவேலுக்கும் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் கள்ள காதலாக மாறியுள்ளது. தனது கள்ளகாதலியின் மீது இருந்த பாசத்தில் தனது ஆட்டோவில் தனது மனைவியின் பெயருடன் சேர்த்து கள்ள காதலியின் பெயரையும் எழுதிவைத்துள்ளார் ஜெயவேல்.
இந்த தகவல் ஜெயவேலின் மனைவிக்கு தெரிய, கணவருடன் சண்டை போட்டுள்ளார். பலமுறை இதுதொடர்பாக நடந்த சண்டையில், கோவத்தின் உச்சிக்கு சென்ற திலகம் என்னை கொன்றுவிட்டு அவளுடன் சந்தோசமாக இரு என கூறியுள்ளார். இதனை கேட்ட ஜெயவேல், வெளியே சென்று மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்து மனைவியை கொலை செய்துள்ளார்.
பின்னர், தனது மனைவி தற்கொலை செய்துகொண்டதாக நாடகமாட, சந்தேகப்பட்ட போலீசார் பிரேதபரிசோதனையின் முடிவில் திலகம் கொலை செய்யப்பட்டிருப்பதை உறுதி செய்தனர். இதனை அடுத்து நடந்த விசாரணையில் மனைவியை கொலைசெய்ததை ஜெயவேல் ஒத்துக்கொண்டார்.
இதுகுறித்து அவர் கூறிய வாக்குமூலத்தில், மது போதையில் வீட்டுக்கு வந்த நான் திலகத்தின் கழுத்தை நெரித்தேன், என்னைக் கொலை செய்துவிடு என்று அவர் சத்தம் போட்டதால் தலையணையை எடுத்து திலகத்தின் முகத்தில் வைத்து அழுத்தினேன். இதில் மூச்சுத் திணறி திலகம் உயிரிழந்துள்ளார். கொலை செய்யும்போது, திலகம் எந்தவித எதிர்ப்பையும் காட்டவில்லை.
பின்னர் அவர் தற்கொலை செய்துகொண்டு இறந்துவிட்டதாக அனைவரிடத்திலும் கூறினேன் என்றார். இதுகுறித்து திலகத்தின் தோழியியிடம் விசாரித்ததில் அவரும் ஜெயவேலுடனான உறவை உறுதி செய்துள்ளார். இதனை அடுத்து ஜெயவேலுவை கைதுசெய்து போலீசார் சிறையில் அடைத்துள்ளனர்.