7 ஆண்டுகளாக குழந்தை இல்லை..! ஊரடங்கு சமயத்தில் தந்தையானார் நடிகர் ஜிவி பிரகாஷ்..! குவியும் வாழ்த்துக்கள்.!

தமிழ் சினிமாவின் நட்சத்திரத்தம்பதிகளில் ஒருவரான GV பிரகாஷ் - சைந்தவிக்கு இன்று அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது.
தமிழ் சினிமாவில் வெய்யில் திரைப்படம் மூலம் இசை அமைப்பாளராக அறிமுகமானவர் GV பிரகாஷ். தனது இசையால் பல்வேறு வெற்றிப்பாடல்களை கொடுத்துவந்த இவர் டார்லிங் திரைப்படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். டார்லிங் படத்தை அடுத்து த்ரிஷா இல்லனா நயன்தாரா, பென்சில் என பல்வேறு படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார்.
இந்நிலையில், பிரபல பின்னணி பாடகி சைந்தவியை காதலித்து திருமணம் செய்துகொண்டார் GV பிரகாஷ். இவர்களது திருமணம் கடந்த 2013 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 27 ஆம் தேதி நடைபெற்றது. திருமணம் முடிந்து ஏறக்குறைய 7 வருடங்கள் ஆகியும் இந்த தம்பதியினருக்கு குழந்தை இல்லை.
இந்நிலையில் இந்த தம்பதியினருக்கு இன்று அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தை பிறந்த செய்தி கேட்டதும் சினிமா பிரபலங்களும், ரசிகர்களும் தங்கள் வாழ்த்துக்களை கூறிவருகின்றனர்.