என்ன பார்க்க வந்துட்டியா! பல ஆண்டுகளுக்கு பிறகு பராமரிப்பாளரை அன்போடு கட்டி அணைத்த குரங்கு! அடுத்து என்ன செய்து பாருங்க! வியக்க வைக்கும் வீடியோ...

பல ஆண்டுகளுக்குப் பிறகு சந்தித்த குரங்கு பராமரிப்பாளரை அன்புடன் அணைத்த உருக்கமான தருணம்
விலங்குகளுக்கும் உணர்வுகள் உள்ளன என்பது மறு முறை நிரூபிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வரும் ஒரு வீடியோ, இதை உணர்த்தும் வகையில் பார்வையாளர்களின் மனதை கவர்ந்துள்ளது.
குரங்கின் உணர்ச்சி வெளிப்பாடு
பல ஆண்டுகளுக்கு முன்பு காப்பாற்றி வளர்த்த குரங்கை சந்திக்க அதன் பராமரிப்பாளர் சென்றார். அவரைப் பார்த்தவுடன், அந்த குரங்கு முதலில் மகிழ்ச்சியுடன் கைகளை பற்றிக் கொண்டு, பின்னர் அன்புடன் அணைத்து, அவர் கொண்டுவந்த வாழைப்பழங்களை எடுத்துக்கொண்டது.
இந்த உருக்கமான காணொளி, விலங்குகளுக்கும் மனிதர்களுக்கும் இடையே ஏற்படும் உணர்வுப் பிணைப்பை வெளிப்படுத்துகிறது.
வைரலாகும் வீடியோவில் பார்வையாளர்களின் ரசனை
இந்த வீடியோ, ‘Weird Things Caught’ என்ற X கணக்கில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுவரை 1.6 ஆயிரம் லைக்குகள் மற்றும் ஏராளமான கருத்துகளை பெற்றுள்ளது.
இதையும் படிங்க: பார்க்கவே பதறுது.. பாதுகாப்பு இல்லாமல் பல அடி உயரத்தில் வேலை செய்யும் தொழிலாளி! ரொம்ப தைரியம் தான்! வைரலாகும் வீடியோ...
“உன்னை மீண்டும் பார்த்ததில் சந்தோஷம்! வாழைப்பழங்களை கொடு!” என ஒருவர் நகைச்சுவையாக கருத்து தெரிவித்துள்ளார்.
“விலங்குகள், மனிதர்களைவிட நன்றியுள்ளவை”, “குரங்கு உணர்ச்சியால் முதலில் அன்பு செலுத்தியது... பிறகு தான் வாழைப்பழங்களை எடுத்தது” என மற்றொரு பயனர் குறிப்பிட்டுள்ளார்.
உண்மையான பிணைப்பை காட்டும் காட்சி
இந்த வீடியோ, விலங்குகளுக்கும் அவர்களை பராமரிக்கும் நபர்களுக்கும் இடையே உருவாகும் நம்பிக்கையும் நன்றியுமற்ற உறவை உணர்த்துகிறது. பல ஆண்டுகளுக்குப் பிறகும், அந்த குரங்கு பராமரிப்பாளரை அன்புடன் நினைத்து நடந்து கொள்வது உணர்ச்சிபூர்வமான தருணமாக உள்ளது.
Chimp’s reaction to seeing a careraker, one who rescued and cared for him years ago.. 🥺 pic.twitter.com/WWDf1AdvVy
— Weird Things Caught 📹 (@UnseenFootages) June 27, 2025
இதையும் படிங்க: விஷ நாகப்பாம்பை உயிரோடு விழுங்க முயன்ற சிறுவன்! 3 முறை முயற்சித்து இறுதியில் நடந்தது என்ன? வைராலாகும் வீடியோ...