பார்க்கவே பதறுது.. பாதுகாப்பு இல்லாமல் பல அடி உயரத்தில் வேலை செய்யும் தொழிலாளி! ரொம்ப தைரியம் தான்! வைரலாகும் வீடியோ...



fearless-laborer-working-on-building-viral-video

பாதுகாப்பின்றி உயரத்தில் பணியாற்றும் தொழிலாளியின் வீடியோ வைரல்

உயரத்தில் வேலை செய்யும் தொழிலாளி என்பதே ஒரு சவாலான விஷயம். ஆனால் சிலருக்கு இது எளிதான காரியமாகவே தெரிகிறது. அந்த வகையில், ஒருவன் தனது துணிச்சலான செயலில் உயிரை பணையமிட்டு பணியை செய்து கொண்டிருப்பது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பாதுகாப்பு இல்லாமல் பல அடி உயரத்தில் பணியில் ஈடுபட்ட தொழிலாளி

இந்த வீடியோவில், கட்டிடத்திற்குப் பல அடி உயரத்தில், எந்தவொரு பாதுகாப்பு உபகரணங்களும் இல்லாமல் மகிழ்ச்சியாக வேலை செய்யும் தொழிலாளியை காண முடிகிறது. அவரின் முகத்தில் பயம் என்ற உணர்வே இல்லை போல் தோன்றுகிறது. கேமரா நெருங்க Zoom செய்யும் பொழுது, அவர் புன்னகையுடன், நம்பிக்கையோடு செயலில் ஈடுபடுகிறார்.

சமூக வலைதளங்களில் பரவும் வீடியோ

இந்த வீடியோவை @RealTofanOjha என்ற இன்ஸ்டாகிராம் பக்கம் வெளியிட்டுள்ளது. பலரும் இதனை லைக் செய்து கருத்துக்களைக் பதிவிட்டுள்ளனர். ஒருவர், "இவர்தான் கத்ரோன்கே கிலாடி உண்மையான வீரர்!" எனப் புகழ்ந்துள்ளார். மற்றொருவர், "இவர் யமராஜின் மாப்பிள்ளை போல இருக்கார்!" என நகைச்சுவையாக பதிவு செய்துள்ளார்.

இதையும் படிங்க: இதெல்லாம் தேவையா? சாக்கடை குழியின் மூடியை திருட முயன்ற வாலிபர்! இறுதியில் நடந்த டுவிஸ்ட்டை பாருங்க! வைரல் வீடியோ..

பாதுகாப்பு அவசியம் என்ற விழிப்புணர்வும் ஏற்படுகிறது

வீடியோவை பார்த்த சிலர், "பாதுகாப்பு இல்லாமல் இப்படி செய்கிறாரே, இது வீரமும் அல்ல, அறிவீனமும் தான்" எனக் கண்டித்துள்ளனர். பாதுகாப்பு உபகரணங்களின் முக்கியத்துவம் குறித்து பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். ஆனால், தொழிலாளியின் துணிச்சல் மற்றும் திறமைக்கு கைதட்டும் செய்திகளும் வந்துகொண்டே இருக்கின்றன.

இதையும் படிங்க: Video : மணமகளுக்கு பழத்தை ஊட்டிய மணமகன்! பெண் செய்த செயலால் கடுப்பான வாலிபர் என்ன செய்துள்ளார் பாருங்க! வைரலாகும் வீடியோ...