தொடர் சரிவில் தங்கம் விலை.! குஷியில் நகைபிரியர்கள்! இன்றைய தங்கம் விலை நிலவரம்...



gold-silver-price-drop-chennai

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை கடந்த சில வாரங்களாக உயர்ந்து வந்த நிலையில், இன்று ஒரு சிறிய விலை குறைவு ஏற்பட்டுள்ளது. இது பொதுமக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இன்றைய தங்கம் விலை நிலவரம்

22 காரட் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.440 குறைந்துள்ளது. நேற்றைய விலை கிராமுக்கு ரூ.8,985 இருந்த நிலையில், இன்று ரூ.8,930 ஆக வீழ்ந்துள்ளது. இதனுடன், சவரனின் விலை ரூ.71,880 லிருந்து ரூ.71,440 ஆக குறைந்துள்ளது.

தங்கம் விலை

தங்கத்தின் விலை மாற்றத்தில் மக்களின் எதிர்வினை

தங்கம் விலை கடந்த சில நாட்களாக ரூ.70 ஆயிரத்திற்கு மேல் விற்பனையாகி வந்தது. இந்நிலையில் இன்று ஏற்பட்ட விலை குறைவு, தங்கம் வாங்க எண்ணியவர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: உச்சகட்ட மகிழ்ச்சியில் நகை பிரியர்கள்! இரண்டாம் நாளாக குறைந்த தங்கத்தின் விலை! இன்றைய விலை நிலவரம்...

வெள்ளி விலையும் குறைந்தது

தங்கம் மட்டுமின்றி வெள்ளியின் விலையும் இன்று சற்று குறைந்துள்ளது. தற்போது வெள்ளி ஒரு கிராமுக்கு ரூ.117.80, மற்றும் ஒரு கிலோவுக்கு ரூ.1,17,800 என விற்கப்படுகிறது.

 

இதையும் படிங்க: நகைபிரியர்கள் மகிழ்ச்சி! அதிகரித்த வேகத்தில் குறைந்த தங்கம் விலை! இன்றைய தங்கம் விலை நிலவரம்...