
உத்தரபிரதேச மாநிலம் ஹர்டோய் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜேஷ் குப்தாவின் மகன் ஆகாஷ் குப்தா. இவரு
உத்தரபிரதேச மாநிலம் ஹர்டோய் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜேஷ் குப்தாவின் மகன் ஆகாஷ் குப்தா. இவருக்கு ராதிகா என்பவருடன் கடந்த மே மாதம் திருமணம் நடைப்பெற்றது. ராஜேஷ் குப்தா வீட்டில் ஒற்றைக் குழல் துப்பாக்கி ஒன்றை வைத்துள்ளார். இந்நிலையில் செல்பி எடுப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்ட ராதிகா
முழுவதும் குண்டு நிரப்பப்பட்ட அந்த ஒற்றைக்குழல் துப்பாக்கியை தன் முன் வைத்தபடி செல்பி எடுத்துள்ளார்.
அப்பொழுது எதிர்பாராதவிதமாக டிரிக்கரில் கை வைத்து அழுத்தியுள்ளார். அதில் குண்டு அவர் மீது பாய்ந்தது. இந்நிலையில் சத்தம் கேட்டு குடும்பத்தினர்கள் அனைவரும் ஓடி வந்து பார்த்துள்ளனர். அங்கு ரத்த வெள்ளத்தில் ராதிகா கிடந்துள்ளார். அதனைக் கண்டு பதறிப்போன அவர்கள் உடனே அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ராதிகா ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக கூறியுள்ளனர்.
இந்த நிலையில் போலீசார் விசாரணை மேற்கொண்டதில், செல்பி எடுக்கும் போது, தவறுதலாக துப்பாக்கி குண்டு பாய்ந்து ராதிகா உயிரிழந்து விட்டார் என ராஜேஷ் குடும்பத்தினர் கூறியுள்ளனர். மேலும் அவர் செல்பி எடுத்த புகைப்படத்தையும் ஒப்படைத்துள்ளனர். ஆனால் இந்த மரணத்தில் தங்களுக்கு சந்தேகம் இருப்பதாக ராதிகாவின் தந்தை தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Advertisement
Advertisement