சினிமா வீடியோ

ஆத்தாடி! சாய்பல்லவியோட ஜெராக்ஸா இது!! அச்சு அசல் அவரை மாதிரியே இருக்காரே!! வைரலாகும் செம ஷாக் வீடியோ!!

Summary:

girl like saipallavi video viral

மலையாளத்தில் வெளிவந்த ப்ரேமம் திரைப்படம் மூலம் தென்னிந்திய சினிமாவில் பிரபலமானவர் நடிகை சாய் பல்லவி. அந்த படத்தில் சாய்பல்லவி நடித்திருந்த மலர் டீச்சர் கதாபாத்திரம் ரசிகர்களிடையே பெருமளவில் நல்ல வரவேற்பை பெற்றது.

இதனை தொடர்ந்து சாய் பல்லவி மலையாளம், தமிழ், தெலுங்கு என பல்வேறு மொழி படங்களில் முன்னணி கதாநாயகர்களுடன் இணைந்து நடித்து வருகிறார் . மேலும் அவர் சமீபத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான மாரி 2 படத்தில் நாயகியாக நடித்திருந்தார். படம் சுமாரான வரவேற்பையே பெற்றிருந்தாலும் படத்தில் வந்த ரவுடி பேபி பாடல் மாபெரும் வரவேற்பை வெற்றிபெற்றது.

மேலும் சூர்யா நடிப்பில் வெளியான NGK படத்திலும் நாயகியாக சூர்யாவிற்கு ஜோடியாக நடித்துள்ளார்.இந்நிலையில் அச்சு அசல் சாய்பல்லவி போல இருக்கும் பெண் ஒருவர் அவரை போன்றே டப்ஸ்மாஷ் ஒன்றை செய்துள்ளார்.அந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.


Advertisement