வாவ்.! பிக்பாஸை தொடர்ந்து மீண்டும் விஜய் டிவியில் அசத்தலாக களமிறங்கிய கேபி! அதுவும் எந்த நிகழ்ச்சியில் பார்த்தீர்களா!gaprilla-participate-in-vijay-tv-murattu-singles-show

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மீண்டும் துவங்கப்பட்டு மிகவும் விறுவிறுப்பாகவும் பரபரப்பாகவும் சென்று கொண்டிருந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் 17ஆம் தேதி முடிவுக்கு வந்தது. இதில் 16 போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டவர் கேபிரில்லா. 

விஜய் தொலைக்காட்சியில் நடன நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட அவர் தனது அசத்தலான நடனத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். இவர் பிக்பாஸ் வீட்டில் இருந்த போது யாரை குறித்தும் குறை பேசாமல், அனைவரிடமும் அன்பாகவும், கோபப்பட வேண்டிய இடத்தில் தனது கருத்துக்களை கூறியும் வந்தார்.பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து, கொண்டதன் மூலம் இவருக்கென  ஏராளமான ரசிகர்கள் உருவாகினர். மேலும் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய இவரை மிகவும் மிஸ் செய்வதாக ரசிகர்கள் பலரும் இவருக்கு தொடர்ந்து மெசேஜ் அனுப்பியுள்ளனர். 

இந்நிலையில் கேபி தற்போது விஜய் தொலைக்காட்சியில் முரட்டு சிங்கிள்ஸ் என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். அத்தகைய புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட கேபி, தன்னை மிஸ் செய்வதாக மெசேஜ் அனுப்பிய என்னுடைய அனைத்து சப்போர்ட்டர்களுக்கும்,நானும் உங்களை மிஸ் செய்கிறேன். இனியும் அப்படி வேண்டாம். நான் முரட்டு சிங்கிள்ஸ் நிகழ்ச்சி மூலம் மீண்டும் உங்களை சந்திக்கிறேன். தொடர்ந்து ஆதரியுங்கள் என பதிவிட்டுள்ளார்.