ஸ்ரீரெட்டிக்கு ஆதரவாக பேசிய பிரபல நடிகை..! அதிர்ச்சியில் சினிமா உலகம்!.
ஸ்ரீரெட்டிக்கு ஆதரவாக பேசிய பிரபல நடிகை..! அதிர்ச்சியில் சினிமா உலகம்!.

திரை உலகினர் மீது அடுக்கடுக்காக பாலியல் புகார் தெரிவித்து வரும் நடிகை ஸ்ரீரெட்டி மீது நடிகர் சங்க தலைவர் நடிகர் விஷால் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தகவல்கள் கூறியுள்ளார்.
தெலுங்கு, தமிழ் இயக்குனர்கள், நடிகர்கள் தயாரிப்பாளர்கள் மீது ஸ்ரீரெட்டி அடுக்கடுக்காக புகார்களைக் கூறிவருகிறார். தமிழ் சினிமாவிலும் பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் உள்ளதாக சில நாட்களாக ஸ்ரீரெட்டி புகார் தெரிவித்தார். இதற்கு பல சினிமா பிரபலங்களும் கண்டனம் தெரிவித்து வந்தனர்.
சில நாட்கள் முன்பு தனியார் தொலைக்காட்சியில் ஸ்ரீரெட்டி அளித்த பேட்டியில், அமெரிக்காவின் சிகாகோவில், தெலுங்கு, தமிழ் நடிகைகள் பாலியல் தொழிலில் ஈடுபடுவதாக கூறியுள்ளார். தெலுங்கு, தமிழ் பிரபல முன்னணி நடிகைகளும், நடிகர்களின் மகள்களும் பாலியல் தொழிலில் ஈடுபடுவது தெரியவந்துள்ளது. இந்த வழக்கு விசாரணையில் அமெரிக்க காவல் துறைக்கு நான் உதவுகிறேன் என்று கூறினார்.
அதன், பிறகு சமீபத்தில் இணையதள ரசிகர்களின் கேள்விக்கு நடிகர் சிம்பு பதில் அளித்துள்ளார். அப்போது அவரிடம் நடிகை ஸ்ரீரெட்டியும் கேள்வி கேட்டுள்ளார். 'உங்களின் வருங்கால மனைவியிடம் என்னென்ன தகுதிகளை எதிர்பார்க்கிறீர்கள்?' என்று ஸ்ரீரெட்டி கேட்டார்.
அதற்கு, சிம்பு பதில் அளித்துள்ளார். ஸ்ரீரெட்டியின் பட்டியலில் நான் இல்லை என்பது தெரிஞ்சுடுச்சு.. தெரிஞ்சி கொண்டேன். என கூறிவிட்டு, பெண்கள் அதிகாரம் பற்றி பேசியுள்ளார். என்று சிம்பு கூறினார்.
இந்நிலையில் ஸ்ரீரெட்டிக்கு ஆதரவளிக்கும் வகையில், நடிகை ஆண்ட்ரியா பேசி இருக்கிறார். "ஸ்ரீரெட்டி சொல்வது உண்மை என்றால், இப்படி ஒரு குற்றச்சாட்டுக்கு வலிமையான இதயம் வேண்டும். நான் இதுபோன்ற சம்பவத்தை இதுவரை சந்தித்ததில்லை. இவர் சந்தித்ததை வெளிப்படையாக கூறுவது சரிதான். இதில் சம்பந்தப்பட்டவர்கள் தண்டிக்கப்படவேண்டும்" என ஆண்ட்ரியா ஆதரவாக பேசியுள்ளார்.