தமிழகம் காதல் – உறவுகள்

மருத்துவமனைக்குள் புகுந்து ஆக்ரோஷமாக தனது மகளையே வெட்டிய தந்தை.! வெளியான அதிரவைக்கும் வெறிச்செயல் !!

Summary:

father try to kill daughter in hospital

மதுரை திருமங்கலம்,. நாகையாபுரம் கிராமத்தில் வசித்து வருபவர்  வாலகுருநாதன். இவருக்கு 19 வயது நிறைந்த  சுஷ்மா என்ற மகள் உள்ளார். இந்நிலையில் சுஷ்மாவிற்கு, பக்கத்து கிராமத்தில் வசித்து வந்த சிவசங்கரன் என்பவருக்கும் இடையே காதல் ஏற்பட்டுள்ளது.  இந்நிலையில் இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் சுஷ்மாவின் தந்தை அவர்களது கடலுக்கு மறுப்பு தெரிவித்து வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த  ஒரு சில மாதங்களுக்கு முன்பு சிவசங்கரனுடன் சுஷ்மா காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்த் நடந்தவற்றை கூறியுள்ளார். மேலும் இருவரும் மேஜர் என்பதால் அங்கு அவர்கள் இருவருக்கும் திருமணம் நடத்தி வைத்தனர்.அதனைத் தொடர்ந்து இருவரும் சிவசங்கரன் வீட்டில் வசித்து வந்தனர். 

காதல் திருமணம் செய்ததால் ஆத்திரம்: ஆஸ்பத்திரிக்குள் புகுந்து மகளை அரிவாளால் வெட்டியவர் கைது

இதனைத் தொடர்ந்து தற்போது சுஷ்மா கர்ப்பமாக உள்ள நிலையில் அவரை அழைத்துக்கொண்டு சிவசங்கரன் நேற்று பரிசோதனைக்காக புதுப்பட்டியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளார். இந்த விவரமறிந்த அங்கு சென்ற சுஷ்மாவின் தந்தை வாலகுருநாதன் மறைத்து வைத்திருந்த அரிவாளால் தனது மகளை வெட்டியுள்ளார்.

இந்நிலையில் சுஷ்மா கதறி அலறவே அவர் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார் , இதனைத் தொடர்ந்து சுஷ்மாவிற்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இது குறித்து சிவசங்கரன் அளித்த புகாரை ஏற்றுக்கொண்ட போலீசார் வாலகுருநாதன் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement