"செல்ஃபி எடுக்க மறுத்ததால் பிரபல சீரியல் நடிகர் மீது ரசிகர்கள் தாக்குதல் " மும்பையில் பரபரப்பு!

"செல்ஃபி எடுக்க மறுத்ததால் பிரபல சீரியல் நடிகர் மீது ரசிகர்கள் தாக்குதல் " மும்பையில் பரபரப்பு!


Fans throwing bottle to actors face

சின்னத்திரை நடிகரான ஆகாஷ் சவுத்ரி, 'பாக்கியலட்சுமி' சீரியல் மூலம் பிரபலமடைந்தவர். தமிழில் ஒளிபரப்பாகும் பாக்யலட்சுமி சீரியல் போலவே ஹிந்தியிலும் ஒரு 'பாக்கியலட்சுமி' சீரியல் ஒளிபரப்பாகிறது. இந்த ஹிந்தி தொடரில் தான் ஆகாஷ் சவுத்ரி நடித்து வருகிறார்.

Vijaytv

தன் நடிப்பால் ரசிகர்களை கவர்ந்த ஆகாஷ் சவுத்ரி, சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள வெளியே சென்றுள்ளார். அப்போது ரசிகர்கள் அவருடன் செல்ஃபி எடுக்க வந்துள்ளனர். இவரும் ரசிகர்களுடன் நின்று செல்ஃபி எடுத்துள்ளார்.

தொடர்ந்து ரசிகர் ஒருவர் ஆகாஷ் சவுத்ரி மீது தண்ணீர் பாட்டிலை எறிந்துள்ளார். ஆனாலும் எதுவும் பதில் பேசாமல் அமைதியாகவே சென்றுள்ளார் ஆகாஷ். ரசிகர்களின் இந்த அநாகரீக செயல் ஹிந்தி சீரியல் உலகில் பலரையும் முகம் சுளிக்க வைத்துள்ளது.

Vijaytv

கடந்த ஜூலை மாதம் ஆகாஷ் சவுத்ரி ஒரு கார் விபத்தில் சிக்கி, எந்த காயமும் இன்றி உயிர் பிழைத்து வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. அவ்விபத்து பற்றி ஆகாஷ் கூறுகையில், " எங்கள் கார் மீது ஒரு டிரக் மோதியது. அதற்கு பிறகு என்ன நடந்தது என்று எனக்கு தெரியவில்லை" என்று ஒரு பேட்டியில்  கூறியிருந்தார்.