என்னது..தொகுப்பாளினி நக்ஷத்ராவிற்கு திருமணம் முடிஞ்சாச்சா! ஒத்த புகைப்படத்தால் குழம்பிபோன ரசிகர்கள்!!

என்னது..தொகுப்பாளினி நக்ஷத்ராவிற்கு திருமணம் முடிஞ்சாச்சா! ஒத்த புகைப்படத்தால் குழம்பிபோன ரசிகர்கள்!!


fans-thought-nakshatra-got-marriage

சன் டிவி, விஜய் டிவி என பல முன்னணி தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக இருந்து ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் நக்ஷத்ரா. இவர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மட்டுமின்றி கலை நிகழ்ச்சிகள், இசை வெளியீட்டு விழா, விருது வழங்கும் விழா என ஏராளமான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். மேலும் ஏராளமான குறும்படங்களிலும் நடித்துள்ளார்.

 நக்ஷத்ரா சன் தொலைக்காட்சியில் குஷ்பூ நடிப்பில் ஒளிபரப்பான லட்சுமி சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதனைத் தொடர்ந்து அவர் நாயகி சீரியலிலும் நடித்துள்ளார். அதுமட்டுமின்றி அவர் சில திரைப்படங்களிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

nakshatra

இந்தநிலையில் நக்ஷத்திராவிற்கு ராகவ் என்பவருடன் திருமணம் நடைபெற உள்ளது. மேலும் அண்மையில் அவர்களது நிச்சயதார்த்தம் முடிவடைந்தது. இந்த நிலையில் அண்மையில் நக்ஷத்திரா தனது ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்துள்ளார். அப்பொழுது ரசிகர் ஒருவர் அவரிடம், உங்களுக்கு திருமணம் முடிந்து விட்டதா? உங்களது புகைப்படங்களை பார்த்தபொழுது நான் அப்படித்தான் நினைத்தேன் என கூறியுள்ளார்.

இதற்கு நக்ஷத்ரா, பலரும் அப்படித்தான் நினைத்துள்ளார்கள். ஆனால் நான் எனது நிச்சயதார்த்தத்தின் முதல்நாள் ஒரு கொண்டாட்டம் வேண்டுமென எண்ணினேன். அந்த மெஹந்தி இரவு புகைப்படங்கள்தான் இவை என அவர் விளக்கமளித்துள்ளார்