நடிகர் விவேக் விரைவில் மீண்டு வரவேண்டும்! இணையத்தில் பிராத்திக்கும் ரசிகர்கள், முக்கிய பிரபலங்கள்!!

நடிகர் விவேக் விரைவில் மீண்டு வரவேண்டும்! இணையத்தில் பிராத்திக்கும் ரசிகர்கள், முக்கிய பிரபலங்கள்!!


fans-prayer-to-vivek-recover-soon

தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக இருக்கும் விவேக் நேற்று கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார். அதனை தொடர்ந்து அவர் அனைவரும் தடுப்பூசி போட்டுகொள்ள வேண்டும். தடுப்பூசி குறித்து எவ்வித அச்சமும் தேவையில்லை. தடுப்பூசி செலுத்திக்கொண்ட பின்பும் கொரோனா வரலாம். ஆனால் உயிரிழப்புகள் போன்ற பாதிப்புகள் இருக்காது என விழிப்புணர்வும் ஏற்படுத்தினார்.

இந்தநிலையில், சாலிகிராமத்தில் தனது வீட்டில் இருந்த நடிகர் விவேக்குக்கு இன்று திடீரென நெஞ்சுவலி மற்றும் மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. அதனைத்தொடர்ந்து அவரது குடும்பத்தினர் அவரை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அனுமதிக்கப்பட்டு வருகிறது.

மேலும் நடிகர் விவேக்கிற்கு இதயம் மற்றும் நுரையீரல் செயல்பாட்டை சீர் செய்யும் வகையில் எக்மோ கருவி பொருத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் நடிகர் விவேக் விரைவில் குணமடைந்து மீண்டு வரவேண்டுமென சிபிராஜ் கிருஷ்ணா, குஷ்பு உள்ளிட்ட பல திரைப்பிரபலங்களும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் விஜயபாஸ்கர், ஆகியோரும், ரசிகர் பெருமக்களும் பிரார்த்தனைகள் மேற்கொண்டு இணையத்தில்
பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர்.