வெளியான சானியா மிர்சாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள், முகம் சுளித்த ரசிகர்கள்.! ஏன் தெரியுமா?

வெளியான சானியா மிர்சாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள், முகம் சுளித்த ரசிகர்கள்.! ஏன் தெரியுமா?


fans-are-shocked-seeing-saniya-mirza

பிரபல டென்னிஸ் வீராங்கனையான சானியா மிர்சா விரைவில் தாயாக போகிறார் என்ற தகவலை கேட்டு சானியா மிர்சாவை கொண்டாடிய  அவரது ரசிகர்கள், சமீபத்தில் அவர் வெளியிட்ட புகைப்படத்தால் எதிராக விமர்சனம் செய்து வருகின்றனர்.

இந்திய டென்னிஸ் வீராங்கனையான சானியா மிர்சா பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர் ஒரு சில மாதங்களுக்கு முன் தான் கர்ப்பமாக இருப்பதாக தகவலை வெளியிட்டார். மேலும்     தாம் கருவுற்ற நாள் முதல் புகைப்படங்களையும் ,சந்தோஷ தருணங்களையும் தமது ரசிகர்களுடன் தொடர்ந்து பகிர்ந்து வருகிறார். இதை அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் மகிழ்ச்சியாக  கொண்டாடி வருகின்றனர்.

sania mirza

இந்நிலையில் சமீபத்தில்  அவரது வளையல்காப்பு நிகழ்ச்சியின் போது அவர் வெளியிட்ட புகைப்படம்  ரசிகர்களை முகம் சுளிக்க வைத்துள்ளது.

மிகுந்த மகிழ்ச்சியுடன் காணப்படும் சானியா மிர்சா இருக்கும் அந்த புகைப்படங்களில் அவர் அணிந்திருக்கும் உடையே ரசிகர்களை அதிருப்தி அடைய செய்துள்ளது.

கர்ப்ப காலத்தில் பெண்களின் உடல் அமைப்பில் பல மாற்றங்கள் ஏற்படும். ஆனால் அந்த காலகட்டத்தில் அதற்கேற்ப உடைகளை நாம்தான் தேர்வு செய்து நாகரிகமாக அணிய  வேண்டும் எனவும் ரசிகர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.