பிரபல தமிழ் இயக்குனர் திடீர் மரணம்! சோகத்தில் திரை உலகம்.

பிரபல தமிழ் இயக்குனர் திடீர் மரணம்! சோகத்தில் திரை உலகம்.


famous-tamil-director-robert-dead

திரை உலகில் பிரபலங்களின் மரணங்கள் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இன்று காலை பிரபல இரட்டை இயக்குனர்களில் ஒருவரான ராபர்ட் மரணமடைந்துள்ளார்.

பாலைவனச் சோலை, மனசுக்குள் மத்தாப்பு ஆகிய படங்களை இயக்கிய இரட்டை இயக்குநர்கள் ராபர்ட்-ராஜசேகர் ஆகியோரில் ஒருவரான ராபர்ட் ஆசிர்வாதம் இன்று காலை 10 மணிக்கு பொத்தேரி எஸ்.ஆர்.எம். மருத்துவமனையில் உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 68.

tamil cinima

ஒரு தலை ராகம் படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றி அனைவரது கவனத்தையும் பெற்றவர் இயக்குனர் ராபர்ட். சென்னை கொளத்தூரில் நாளை அவரது இறுதிச்சடங்குகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.