உலகம் சினிமா

கார் கவிழ்ந்து பரிதாபமாக உயிரிழந்த பிரபல பாடகி, அதிர்ச்சியில் ரசிகர்கள்!

Summary:

famous singer dead in car accident

கனடாவை சேர்ந்தவர் பிரபல ரொமேனிய, கனடா பாடகி அன்கா பாப். சிறந்த பாடகியான இவர் 2015ஆம் ஆண்டு வெளியிட்ட ‘free Love’ என்ற ஆல்பத்தின் மூலம் பிரபலமானார். இந்த ஆல்பம் பிரித்தானியர்களால் பெரிதும் வரவேற்கப்பட்டது.ன் அவர் பல பாடல்களை பாடி புகழின் உச்சிக்கே சென்றார். 

இந்நிலையில் அன்கா  பயணம் செய்த கார்,  தென் மேற்கு ரொமேனியாவில் உள்ள தனுபே நதியில் தலைகுப்புற கவிழ்ந்தது. இதில் அன்கா நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்

அதனை தொடர்ந்து தனது தாயை சந்திக்கச் சென்ற தங்கை இரவு வெகு நேரமாகியும் வீடு திரும்பாததால் அச்சமடைந்த அன்காவின் சகோதரி  இது குறித்து போலீசாருக்கு தகவளித்துள்ளார்.

 தகவலறிந்த போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு நதியில் மிதந்த அவரது காரைக் கண்டுபிடித்தனர்.

பின்னர் ஆழ்கடல் நீச்சல் வீரர்கள் நதிக்கடியிலிருந்து அன்காவின் உடலை மீட்டுள்ளனர்.இந்த சோக சம்பவம் ரசிகர்களிடையே பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement