சினிமா

பிரபல நடிகர் மூச்சுத் திணறலால் மருத்துவமனையில் அனுமதி.! பிரார்த்திக்கும் ரசிகர்கள்.!

Summary:

நடிகர் திலீப் குமார் மூச்சுத் திணறல் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பாலிவுட் சினிமாவில் 1944ம் ஆண்டு வெளியான Jwar Bhata என்ற படத்தில் நடித்ததன் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் திலீப் குமார். இவர் கிட்டத்தட்ட 50 ஆண்டுகள் பாலிவுட் சினிமாவில் நடித்துள்ளார். மேலும் அண்டாஸ், ஆன், தேவதாஸ், கங்கா ஜமுனா, ராம் அவுர் ஷியாம் உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

ஏறக்குறைய 65 படங்களுக்கு மேல் ஹீரோவாக நடித்துள்ள அவர் இறுதியாக 1998ம் ஆண்டு வெளிவந்த கில்லா என்ற படத்தில்  நடித்திருந்தார். பழம்பெரும் நடிகரான இவர் மும்பையில் வசித்து வருகிறார்.

இந்த நிலையில் 98 வயது நிறைந்த அவருக்கு திடீரென இன்று காலை மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து அவர் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவரது மனைவி சாய்ரா பானு தெரிவித்துள்ளார். இந்நிலையில் அவர் நல்லபடியாக மீண்டு வரவேண்டும் என திரையுலக பிரபலங்கள் பிரார்த்தனை மேற்கொள்கின்றனர்.


Advertisement