காட்டு பங்களாவில் நடந்த போதை விருந்து..! போலீஸ் ரெய்டில் சிக்கிய பிரபல கவர்ச்சி நடிகை.! யாருனு பார்த்தீங்களா.?

காட்டு பங்களாவில் நடந்த போதை விருந்து..! போலீஸ் ரெய்டில் சிக்கிய பிரபல கவர்ச்சி நடிகை.! யாருனு பார்த்தீங்களா.?


famous-actress-arrested

மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் மாவட்டத்தில் இகத்புரி மலை அருகே உள்ள சொகுசு பங்களாவில் ரகசியமாக போதை விருந்து நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து போலீசார் அந்த பங்களாவில் அதிரடியாக சோதனை நடத்தினர். போலீசார் நடத்திய சோதனையில், அங்கு அனுமதியின்றி பார்ட்டி நடத்தப்பட்டதும், போதைப் பொருள்கள் பயன்படுத்தப்பட்டதும் தெரிய வந்தது.

அதில் கலந்து கொண்ட 22 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் நடிகை ஹீனா பாஞ்சலும் ஒருவர். பாலிவுட்டில் கவர்ச்சி நடிகையாக வலம் வரும் இவர், தமிழில் யாகாவாராயினும் நாகாக்க, கன்னட படமான லொட்டு, தெலுங்கில் மல்லிபு போன்ற படங்களில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

heena panchalஅங்கு நடந்த பார்ட்டியில், ஹீனா பாஞ்சல் தொழில்முறையில் நடனமாடவே சென்றதாக கூறப்படுகிறது. இந்தநிலையில், பாலிவுட் சினிமாக்களில் பிரபல கவர்ச்சி நடிகையாக இருந்து வரும் நடிகை ஹீனா பாஞ்சலின் கைது பாலிவுட் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.