"அச்சச்சோ..." கார் விபத்தில் சிக்கிய பிரபல நடிகர்!famous-actor-met-with-a-car-accident-near-hyderabad-fil

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் சர்வானந்த். இவர் தமிழில் எங்கேயும் எப்போதும்  நாளை நமதே மற்றும் ஜேகே உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார். எங்கேயும் எப்போதும் திரைப்படத்தில் இவர் நடித்த கதாபாத்திரம் ரசிகர்களால் பெரிதும் பேசப்பட்டது.

இன்று ஹைதராபாத் ஃபிலிம் சிட்டி அருகே இவர் சென்ற கார் விபத்திற்கு உள்ளானது.  அந்தப் பகுதிக்கு அருகில் இருந்த ஊர் மக்கள் இவரை விபத்திலிருந்து மீட்டிருக்கின்றனர்.

Engeyum Eppothum

அங்கிருந்த மக்களின் உதவியுடன் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு இருக்கிறார் இவர். பாதுகாப்பு வசதிகள் மிகுந்த ரேஞ்ச் ரோவர் காரில் சென்றதால் சிறு காயங்களுடன் உயிர் பிழைத்ததாக  விபத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர்.

Engeyum Eppothum

தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இவ்வாறு நலமுடன் உள்ளதாகவும் தெரிவித்தனர். கார் விபத்தில் தெலுங்கு சினிமாவின் பிரபல நடிகர் சிக்கியது பெரும் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது.