மனிதர்களையும் மிஞ்சிய யானை, பார்ப்பவர்களை ஆச்சரியத்தில் மூழ்கடிக்கும் வைரலாகும் வீடியோ .!

மனிதர்களையும் மிஞ்சிய யானை, பார்ப்பவர்களை ஆச்சரியத்தில் மூழ்கடிக்கும் வைரலாகும் வீடியோ .!


elephant-put-garbage-in-dustbin

யானை ஒன்று குப்பைகளை சுத்தம் செய்து குப்பைத் தொட்டியில் ஸ்டைலாக போடுவது போல நடிகர் அக்‌ஷய் குமார் வெளியிட்டுள்ள வீடியோ வைரலாகி வருகிறது.

ஐந்தறிவு ஜீவன்களுக்குக் கூட இருக்கும் இடத்தை சுத்தமாகவும் சுகாதாரமாகவும் வைத்துக் கொள்ள முன்வந்துள்ளது .

அரசு எவ்வளவு சட்டம் போட்டாலும் மக்கள் அதனை பெரிதாக எடுத்துகொள்ளமல் வீதிகளில் குப்பைகள் நிறைந்த வண்ணமே இருக்கிறது. இருப்பினும் அரசும் பல சமூக ஆர்வலர்களும் சுற்றுச்சூழலோடு ஒன்றியிருக்குமாறு விழிப்புணர்வுகளும்,நாட்டு மக்களுக்கு டிவி, தியேட்டர் என ஒளிபரப்பிக் கொண்டே  இருக்கின்றனர்.

இந்நிலையில், யானை ஒன்று குப்பையை ஸ்டைலாக தூக்கி குப்பைத் தொட்டியில் போடும் விடியோவை பிரபல பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, இந்த விடியோ உண்மையானதோ அல்லது போலியோ… இதிலிருக்கும் யானை, மனிதர்களான நம்மைவிட சுற்றுச் சூழலோடு ஒன்றியிருக்கிறது என கூறியுள்ளார்.


இந்த யானையின் விடியோவை நெட்டிசன்கள் வைரலாக்கி வருகின்றனர்.