சினிமா

அட.. ஈரம் பட நடிகையா இது! சுத்தமா ஆள் அடையாளமே தெரியாத அளவிற்கு மாறிட்டாரே! ஷாக்கான ரசிகர்கள்!!

Summary:

அட.. ஈரம் பட நடிகையா இது! சுத்தமா ஆள் அடையாளமே தெரியாத அளவிற்கு மாறிட்டாரே! ஷாக்கான ரசிகர்கள்!!

தமிழ் சினிமாவில் 2001ஆம் ஆண்டு வெளிவந்த சமுத்திரம் படத்தில் முரளிக்கு ஜோடியாக நடித்தவர் சிந்து மேனன். அதனைத் தொடர்ந்து அவர் விஜய் நடிப்பில் வெளிவந்த யூத் படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். 

பின்னர் நீண்ட இடைவேளைக்குப் பின் அவர் ஆதி நடிப்பில் வெளிவந்த ஈரம் படத்தில் நடித்திருந்தார். இப்படத்தில் அவரது நடிப்பு அனைவராலும் பெருமளவில் பாராட்டப்பட்டது. மேலும் அவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் மொழி படங்களிலும் நடித்துள்ளார்.

நடிகை சிந்து மேனன் கடந்த 2010ஆம் ஆண்டு லண்டனை சேர்ந்த சாப்ட்வேர் இன்ஜினியரான டொமினிக் பிரபு என்பவரை திருமணம் செய்து கொண்டார். அதைத் தொடர்ந்து அவர் கணவர், பிள்ளைகள் என குடும்பத்துடன் லண்டனிலேயே செட்டிலாகிவிட்டார். மேலும் திருமணத்திற்கு பிறகு சிந்து மேனன் உடல் எடை அதிகரித்து அடையாளம் தெரியாத அளவிற்கு மாறியுள்ளார். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.


Advertisement