சினிமா

தலைவிரித்தாடும் போதைப்பொருள் விவகாரம்! கார்த்தி பட நடிகையிடம் தீவிர விசாரணை! பரபரப்பு சம்பவம்!

Summary:

Drugs used investigation with Ragul preeth singh

பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த ஜூன் மாதம் 14ம் தேதி தற்கொலை செய்து கொண்டார். இது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் சுஷாந்த் மரணத்திற்கு காரணம் திரையுலகில் வாரிசு அரசியல் ஆதிக்கம் மற்றும் போதைப்பொருள் புழக்கம்தான் என குற்றம்சாட்டப்பட்ட நிலையில் போதைப்பொருள் விவகாரம் தலை தூக்க துவங்கியது.

அதனைத் தொடர்ந்து போதைப்பொருள் தடுப்பு போலீசார்கள் தீவிர நடவடிக்கைகளை  மேற்கொண்டு நடிகர் சுஷாந்தின் காதலி ரியா சக்கரவர்த்தி, அவரது தம்பி சோவிக், சுஷாந்த்தின் மேனேஜர் சாமுவேல் மிரண்டா உட்பட பலரையும் கைது செய்தனர். 

 

மேலும் விசாரணையில் நடிகைகள் ரகுல் பிரீத் சிங், தீபிகா படுகோனே, சாரா அலிகான், ஷரத்தா கபூர் ஆகியோருக்கும் போதைப்பொருள் கும்பலுடன் தொடர்பு இருப்பதாக கூறப்பட்டது. இந்நிலையில் போலீசார்கள் அவர்கள் அனைவருக்கும் கடந்த சில தினங்களுக்கு முன்பு விசாரணைக்கு ஆஜராகும்படி சம்மன் அனுப்பியுள்ளனர். அதனைத் தொடர்ந்து  இன்று காலை நடிகர் ரகுல் பிரீத் சிங் விசாரணைக்கு ஆஜராகி உள்ளார்.

ரகுல் பிரீத் சிங் தமிழில் நடிகர் கார்த்தியுடன் தீரன் அதிகாரம் ஒன்று என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து அவர் சூர்யாவுடன் என்ஜிகே படத்தில் நடித்துள்ளார். மேலும் தற்போது அயலான் மற்றும் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார்.


Advertisement