தமிழகம் சினிமா

என்னை இனி யாரும் அப்படி கூப்பிடாதீங்க!! அஜித் வெளியிட்ட பரபரப்பு அறிக்கை.. முழு தகவல் இதோ..

Summary:

என்னை இனி யாரும் அப்படி கூப்பிடாதீங்க!! அஜித் வெளியிட்ட பரபரப்பு அறிக்கை.. முழு தகவல் இதோ..

தன்னை தல என்றோ அல்லது வேறு ஏதுனும் பட்ட பெயர்கள் வைத்தே அழைக்கவேண்டாம் என நடிகர் அஜித்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்தியா முழுவதும் ஏகப்பட்ட ரசிகர்களை கொண்டவர் அஜித். இவரை தல என்றும், AK என்றும் பல பட்ட பெயர்களை வைத்து ரசிகர்கள் அழைத்துவருகின்றனர். குறிப்பாக தல என்பதுதான் அனைவரும் பயன்படுத்தும் பொதுவான ஒன்று. இந்நிலையில் தன்னை அஜித்குமார், அஜித் அல்லது AK என்று அழைத்தால் மட்டும் போதும், வேறு எந்த பட்ட பெயர்களையும் வைத்து அழைக்கவேண்டும் என நடிகர் அஜித் தனது ரசிகர்கள் மற்றும் ஊடங்கங்களுக்கு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது, "இனி வரும் காலங்களில் என்னை பற்றி எழுதும்போது என்னை பற்றி குறிப்பிட்டு பேசும்போதோ என் இயற்பெயரான அஜித் குமார் மற்றும் அஜித் என்றோ அல்லது ஏ கே என்றோ குறிப்பிட்டால் போதுமானது என்றும் ,தல என்றோ வேறு ஏதாவது பட்ட பெயர்களையோ குறிப்பிட்டு அழைக்க வேண்டாம் என்று அஜித் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்."


Advertisement