சினிமா

சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்தில் வில்லனாகும் பிரபல நடிகர்! யார் அவர் தெரியுமா? வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு.

Summary:

Doctor movie sivakarthikayan vinai

இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக வெளியான படம் தான் நம்ம வீட்டு பிள்ளை. இப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இப்படத்தில் அண்ணா, தங்கை பாசம் அனைவராலும் ரசிக்கப்பட்டது.

மேலும் இப்படம் ஒரு குடும்ப பாங்கான படம் என்பதால் அனைத்து மக்களும் ரசிக்கும் விதமாக அமைந்தது. அதனை அடுத்து நடிகர் சிவகார்த்திகேயன் பி. எஸ். மித்ரன் இயக்கத்தில் ஹுரோ படத்தில் நடித்துள்ளார்.

இப்படத்தின் பணிகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் படத்தின் ரிலீசுகாக ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் அடுத்ததாக சிவகார்த்திகேயன் டாக்டர் படத்தில் நடிக்கவுள்ளார். அதனை பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு அண்மையில் வெளியானது.

மேலும் டாக்டர் படத்தை கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் மற்றும் எஸ்.கே ப்ரொடக்ஷன் இணைந்து தயாரிக்கவுள்ளது. மேலும் இப்படத்தை கோலமாவு கோகிலா பட இயக்குனர் நெல்சன் இயக்குகிறார். இப்படத்தில் வில்லனாக நடிகர் வினை புதிதாக இணைந்துள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.


Advertisement