சினிமா

பெரும் எதிர்பார்ப்பில் இருந்த சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு ஷாக் நியூஸ்! வெளிவந்த திடீர் அறிவிப்பு!

Summary:

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்ப

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் டாக்டர். இப்படத்தை கோலமாவு கோகிலா படத்தை இயக்கிய நெல்சன் இயக்கியுள்ளார். மேலும் டாக்டர் படத்தை கேஜேஆர் ஸ்டூடியோஸ் நிறுவனத்துடன் இணைந்து  சிவகார்த்திகேயனின் எஸ்.கே.புரொடக்‌ஷன் நிறுவனமும் தயாரித்துள்ளது..   இந்த படத்தில் ஹீரோயினாக பிரியங்கா என்பவர் நடித்துள்ளார். 

மேலும் அவர்களுடன் யோகிபாபு, வினய் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இதன் படப்பிடிப்பு முடிவடைந்து படம் வெளியிடுவதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் டாக்டர் படம் மார்ச் 26-ம் தேதி வெளியாகும் எனப் படக்குழுவினர் அறிவித்திருந்தனர்.

இந்த நிலையில் தற்போது ரிலீஸ் தேதியை தள்ளிவைப்பது குறித்து படக்குழு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி தமிழகத்தில் தேர்தல் நடைபெற உள்ளதால் டாக்டர் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விரைவில் புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும். டாக்டர் படம் ஆரம்பித்த நாளிலிருந்தே கொடுத்து வந்த ஆதரவை, அப்படியே வைத்திருங்கள். இந்தக் காத்திருப்புக்கு விருந்தாக டாக்டர் படம்  அமையும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.


Advertisement