சினிமா

நடிகை திரிஷாவின் அடுத்த படம் என்ன தெரியுமா ? வெளியான அதிர்ச்சி தகவல் !

Summary:

Do you know the actress Trisha's next film? Outbound information!

தற்போது தமிழகத்தில் வளர்ந்து பிரபல நடிகைகளில் நடிகை திரிஷாவும் ஒருவர் ஆவார். இவர் தற்போது ஒரு புதிய படத்தில் நடித்து வருகிறார். அந்த படத்திற்கு " பரமபதம் விளையாட்டு " என்னும் பெயர் வைக்க பட்டுள்ளது.

இந்த  " பரமபதம் விளையாட்டு " என்னும் படத்தை இயக்குனர் திருஞானம் அவர்கள் இயக்கி வருகிறார். இந்த படத்தை பற்றி இயக்குனர் திருஞானம்  கூறிய போது இந்த படத்தில் நடிகை திரிஷா இரட்டை வேடத்தில் நடிக்க உள்ளார் என கூறியுள்ளார்.

மேலும் இந்த படம் தற்போது இறுதி கட்டத்தை எட்டியதாகவும். இந்த படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு தற்போது ஏற்காட்டில் உள்ள ராபர்ட் கிளைவ்மெண்க்ஷனில் நடக்கிறது எனவும் கூறியுள்ளார். 

நடிகை திரிஷா முதன் முறையாக இது போன்ற கதையில் நடிக்கிறார் என்றும் இந்த கதையை கேட்டவுடன் இந்த படத்தில் தனது கதாபாத்திரத்தை மிகவும் பிடித்துள்ளது என்று கூறினாராம். இந்த படத்தில் வரும் கடினமான காட்சிகளை கூட இவர் ஒரே டேக்கில் நடித்தார் எனவும் கூறியுள்ளார்.

இந்த படத்தின் மைய கருத்து என்ன வென்றால் சரியான ஒரு விசயத்தை தவறான நேரத்தில் சொல்வதால் என்ன விளைவு ஏற்படுகிறது என்பதை குறித்தது என்று கூறியுள்ளார். 

இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அம்ரிஷ் அவர்கள் இசை அமைத்துள்ளார் என்றும். இந்த படத்திற்கு ஆர்.டி.ராஜசேகர் தான் ஒளிப்பதிவாளர் என்றும் இயக்குனர் திருஞானம் கூறினார்.


Advertisement