நடிகர் சூர்யாவிற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டாம்! தலைமை நீதிபதிக்கு முன்னாள் நீதிபதிகள் கடிதம்!

நடிகர் சூர்யாவிற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டாம்! தலைமை நீதிபதிக்கு முன்னாள் நீதிபதிகள் கடிதம்!


do-not-take-action-against-surya-retired

மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வு நேற்று நடைப்பெற்றது. இதற்கிடையில் தேர்வு  அச்சத்தால் தமிழகத்தில் பல மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டனர். இந்தச் சம்பவங்கள் அனைவருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும்  நீட் தேர்விற்கு எதிராக பலரும் குரல் எழுப்பினர்.

இந்நிலையில் இத்தகைய நிகழ்வால் மனவேதனையடைந்து நடிகர் சூர்யா நேற்று அறிக்கை வெளியிட்டார். அதில் அவர், நீட் தேர்வு பயத்தால் ஒரே நாளில் மூன்று மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டது எனது மனசாட்சியை உலுக்குகிறது. அந்த மாணவர்களின் குடும்பத்தினரின் வலியை என்னால் கற்பனை செய்து கூட பார்க்க முடியவில்லை. கொரோனா அச்சத்தால் உயிருக்கு பயந்து வீடியோ கான்பிரன்ஸிங் மூலம் நீதி வழங்கும் நீதிமன்றம், மாணவர்களை அச்சமில்லாமல் போய் தேர்வு எழுத வேண்டும் என்று உத்தரவிடுகிறது என கூறியிருந்தார்.

surya

இந்நிலையில் சூர்யா மீது  நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர நீதிபதி எஸ்.எம் சுப்பிரமணியம் என்பவர்
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதனை தொடர்ந்து முன்னாள் நீதிபதிகளான கே.சந்துரு, கே.என்.பாட்ஷா, சுதந்திரம், அரிபரந்தாமன், கே.கண்ணன், ஜி.எம்.அக்பர் அலி ஆகியோர் கருத்துக் சுதந்திரத்தை சிதைக்கும் வகையில் நடிகர் சூர்யா மீது நடவடிக்கை எடுக்க தேவையில்லை. பெருந்தன்மையாக விட்டுவிடலாம் என தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளனர்.