சிம்பு மாமா ஐ லவ் யூ! ஈஸ்வரன் இசை வெளியீட்டு விழாவில் வெடித்த சர்ச்சை! விளக்கமளித்து வீடியோ வெளியிட்ட இயக்குனர்!

சிம்பு மாமா ஐ லவ் யூ! ஈஸ்வரன் இசை வெளியீட்டு விழாவில் வெடித்த சர்ச்சை! விளக்கமளித்து வீடியோ வெளியிட்ட இயக்குனர்!


director-suseenthiran-explain-video-about-audio-launch

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான சிம்பு, சுசீந்திரன் இயக்கத்தில் ஈஸ்வரன் படத்தில் நடித்து முடித்துள்ளார். மேலும், இந்த படத்தில் பாரதிராஜா, நிதி அகர்வால், நந்திதா, பால சரவணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மிகக் குறுகிய காலத்தில், உருவாக்கப்பட்ட இந்தப் படம், வருகிற பொங்கல் பண்டிகை முன்னிட்டு ஜனவரி 14-ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது. 

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. விழாவில் சுசீந்திரன், பாரதிராஜா உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டனர். அப்பொழுது நிகழ்ச்சியில் நடிகை நிதி அகர்வால் பேசிக் கொண்டிருக்கும்போது அவரது அருகில் இயக்குனர் சுசீந்திரன் நின்றுகொண்டு அவரைப் பேசவிடாமல் கிண்டல் செய்து பேசிக் கொண்டிருந்தார். மேலும் அவரிடம், சிம்பு மாமாவை பத்தி பேசு, சிம்பு மாமா ஐ லவ் யூ என்று சொல்லுமாறும் தொடர்ந்து கூறிக்கொண்டே இருந்துள்ளார். இதனால் நிதி அகர்வால் தர்மசங்கடம் அடைந்துள்ளார்.

இந்த நிலையில் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி, வைரலான நிலையில் இதனை பலரும் விமர்சனம் செய்து சர்ச்சையானது. அதனை தொடர்ந்து இதுகுறித்து சுசீந்திரன் விளக்கமளித்து வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், ஈஸ்வரன் படத்தில் நிதி அகர்வாலுக்கு சிம்புவை விரட்டி விரட்டி காதலிக்கும் கதாபாத்திரம். படத்திலும் கூட ‘மாமா ஐ லவ் யூ’ என்ற டயலாக் வரும். எனவே, படத்தின் கதாபாத்திரத்தின் அடிப்படையிலேயே அப்படிச் சொல்லச் சொன்னேன். அதனை பலரும் தவறாகப் புரிந்துகொண்டுள்ளனர் என கூறியுள்ளார். மேலும் அந்த வீடிவோவில் அவருடன் நடிகை நிதி அகர்வாலும் அமர்ந்துள்ளார்.