சினிமா

நடிகர் விஜய்யை படு மோசமாக பேசியுள்ள பிரபல இயக்குனர். சர்ச்சை விடீயோவால் கொந்தளிப்பில் ரசிகர்கள்.

Summary:

Director speech about vijay video goes viral

இந்திய அளவில் பிரபலமான நடிகர்களில் ஒருவர் தளபதி விஜய். இவருக்கென ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். தற்போது இயக்குனர் அட்லீ இயக்கத்தில் பிகில் படத்தில் நடித்துவருகிறார் விஜய். படம் வரும் தீபாவளிக்கு வெளியாக உள்ளது. பொதுவாக மேடையில் ஏறி விஜய் பேசினாலே அது சர்ச்சையாக மாறுவது வழக்கமாகிவிட்டது.

இந்நிலையில் நடிகர் விஜய்யை பற்றி கடுமையாக விமர்சித்து வீடியோ வெளியிட்டுள்ளார் சிந்து சமவெளி பட புகழ் இயக்குனர் சாமி. அந்த வீடியோவில் அவர் விஜய் குறித்து பேசியிருப்பது விஜய் ரசிகர்களிடையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரசிகர்களை சந்தித்து அவர்களுக்கு கை கொடுத்துவிட்டு விஜய் டெட்டால் ஊற்றி கை கழுவுவதாகவும், அவர் நிஜ வாழ்க்கையிலும் சிறந்த நடிகர் என்றும், நடிக்க வந்தால் நடிப்பை மட்டும் பாருங்கள், தேவை இல்லாமல் பேசி பிரச்சனையில் சிக்கதிர்கள் என்று கடுமையாக விஜய் பற்றி பேசியுள்ளார் இயக்குனர் சாமி.

மேலும், 50 கோடி சம்பளம் வாங்குகிறீர்கள். 60 நாள் நடித்துவிட்டு பிளாக்கில் சொத்து வாங்கி கொள்கிறீர்கள். நேர்மை, உண்மை என மேடையில் மட்டும் பேசுகிறீர்கள். எத்தனை நாள் தமிழகத்தை ஏமாற்றமுடியும் என கேள்வி எழுப்பியுள்ளார்.

இதோ அந்த வீடியோ.


Advertisement