தமிழகம் சினிமா

பிறந்தநாளில் இப்படியா!! மருத்துவமனையில் அனுமதிக்கபட்ட ரஜினி, கமல் பட பிரபல இயக்குனர்! பேரதிர்ச்சியில் ரசிகர்கள்!

Summary:

கடந்த ஆண்டு நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. சாதாரண மக்கள்

கடந்த ஆண்டு நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. சாதாரண மக்கள் முதல் அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள்,விளையாட்டு வீரர்கள் என பலரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில் கொரோனா தொற்று சற்று குறைந்து வந்த நிலையில் தற்போது மீண்டும் இரண்டாவது அலை தீவிரமாக பரவ துவங்கியுள்ளது.

இந்நிலையில் பிரபல இயக்குனரான எஸ்பி முத்துராமனுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. பழம் பெரும் இயக்குனர் எஸ்.பி முத்துராமன் ரஜினி, கமல், கார்த்திக், சத்யராஜ், பிரபு, விஜயகாந்த் உள்ளிட்ட அனைத்து முன்னணி நடிகர்களையும் வைத்து ஏராளமான சூப்பர் ஹிட் ஆக்சன் படங்களை இயக்கியுள்ளார்.  பின்னர் வயது முதுமை காரணமாக  அவர் படங்கள் எதுவும் இயக்காமல் ஓய்வு எடுத்து வந்தார்.

இவர் சில தினங்களுக்கு முன்பு தனது 86 ஆவது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். இந்நிலையில் இயக்குனர் எஸ்பி முத்துராமனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு மெட்வே மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.  இந்நிலையில் அவர் மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் இருப்பதாகவும் உடல் நிலை தற்போது சீராக உள்ளதாகவும் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Advertisement