மகனுக்காக தந்தை எடுத்த முக்கிய முடிவு.. வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
அட பாவமே!! இயக்குநர் அருண்ராஜா காமராஜின் மனைவி திடீர் மரணம்!! கொரோனா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்
பிரபல தமிழ் திரைப்பட இயக்குனர் அருண்ராஜா காமராஜின் மனைவி கொரோனாவால் உயிரிழந்த தகவல் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இயக்குனர் அட்லீ இயக்கத்தில், ஆர்யா, நயன்தாரா நடிப்பில் உருவான ராஜா ராணி படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார் அருண்ராஜா காமராஜ். அதனை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் உருவான கபாலி படத்தில் நெருப்புடா பாடலை எழுதி, பாடி மக்கள் மத்தியில் மேலும் பிரபலமானார் அருண்ராஜா.
அதுமட்டும் இல்லாமல் பெண்கள் கிரிக்கெட்டையும், விவசாயத்தையும் மையப்படுத்தி கனா என்ற படத்தையும் இயக்கி இயக்குனராகவும் வெற்றிபெற்ற இவர், தற்போது உதயநிதி ஸ்டாலினை வைத்து ஆர்ட்டிகிள் 15 என்ற பாலிவுட் படத்தை தமிழில் ரீமேக் செய்யவுள்ளார்.

இந்நிலையில் அருண்ராஜா காமராஜின் மனைவி சிந்துஜா (32) கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். ஆனால் அவருக்கு சிகிச்சை பலனளிக்காமல் இன்று நள்ளிரவு உயிரிழந்துள்ளார். இந்த தகவல் அருண்ராஜா காமராஜ் ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்திஉள்ளநிலையில் பலரும் அவரது மனைவி மரணத்துக்கு இரங்கல் தெரிவித்துவருகின்றனர்.