இங்கயும் வந்துட்டாரா தனுஷின் மனைவி! ஆரம்பமே அசத்தல்!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் தனுஷ். நடிப்பையும் தாண்டி இயக்குனர், பாடலாசிரியர், பாடகர், தயாரிப்பாளர் என பல்வேறு திறமைகளை தன்னுள் கொண்டுள்ளார் தனுஷ். மேலும், தனுஷ் சூப்பர் ஸ்டாரின் மருமகன் என்பதும் நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்.
சூப்பர் ஸ்டாரின் முதல் மகள் ஐஸ்வர்யாவை திருமணம் செய்துள்ளார் தனுஷ். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். தனுஷ் மனைவி ஐஸ்வர்யாவும் ஒரு இயக்குனர். வை ராஜா வை, 3 போன்ற படங்களை இயக்கியுள்ளார் ஐஸ்வர்யா தனுஷ்.
The wife gets on insta! Wish you some digital fun 🤗🤗https://t.co/dUvS48Ljmt
— Dhanush (@dhanushkraja) February 24, 2019
இவர் சில மாதங்களுக்கு முன்பு உலக பெண்கள் தினத்தில் ஐக்கிய நாடுகள் மன்றத்தில் பரத நாட்டியம் ஆடியது கடும் விமர்சனத்திற்குள்ளானது. இந்நிலையில் முதன்முறையாக இன்ஸ்டாகிராமில் அக்கவுண்ட் தொடங்கியுள்ளார் ஐஸ்வர்யா. இதுவரை இந்த பக்கம் வராமல் இருந்தவர் தனது தங்கை சவுந்தர்யா திருமணத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.
மேலும் , தன் மனைவி இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட் தொடங்கியுள்ளதை நடிகர் தனுஷ் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.