சினிமா

தனுஷ் பட டைட்டிலை கைப்பற்றிய சிவகார்த்திகேயன்! வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு.

Summary:

Dhanush sivakarthikayan doctor movie

தமிழ் சினிமாவில் பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியில் தொகுப்பாளராக அறிமுகமாகி பின் தனது கடின உழைப்பால் உயர்ந்தவர் தான் நடிகர் சிவகார்த்திகேயன். அதனை தொடர்ந்து வெள்ளிதிரையில் கால் பதித்து தனக்கே ஒரு இடத்தை உருவாக்கியவர்.

இவர் நடிப்பில் வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படத்தின் மூலம் அதிக ரசிகர்கள் பட்டாளத்தை வென்றார். அது முதல் குழந்தை விரும்பும் நடிகராக மாறினார். அதனை தொடர்ந்து ரெமோ, ரஜினி முருகன், காக்கி சட்டை போன்ற படங்களில் நடித்துள்ளார்.

சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான நம்ம வீட்டு பிள்ளை படம் அனைத்து மக்கள் மத்தியிலும் பிரபலமானது. மேலும் அப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது மட்டுமின்றி வசூல் ரீதியாகவும் சாதனைகளை படைத்தது.

கோலமாவு கோகிலா புகழ் இயக்குனர் நெல்சன் இயக்கும் டாக்டர் என பெயர் வைக்கப்பட்டுள்ள புதிய படத்தில் நடிக்கவுள்ளார். தற்போது இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகிவுள்ளது.

ஆனால் இதற்கு முன்பு நடிகர் தனுஷ் டாக்டர்ஸ் என்ற டைட்டிலில் நடிக்கயிருந்தார். ஆனால் அந்த படம் ஒரு சில காரணங்களால் நிறுத்தப்பட்டது. இந்நிலையில் தற்போது நடிகர் சிவகார்த்திகேயன் அந்த டைட்டிலை கைப்பற்றியுள்ளார்.


Advertisement