சினிமா

தனுசின் ஹாலிவுட் படத்தின் ஷூட்டிங் ஒத்திவைப்பு! ஏன் திடீர்னு என்னாச்சு? வெளியான காரணம்!

Summary:

நடிகர் தனுஷின் ஹாலிவுட் படத்தின் சூட்டிங் கொரோனா பரவல்காரணமாக தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக இருக்கும் தனுஷ் நெட்பிளிக்ஸ் தயாரிக்கும் 'தி கிரே மேன்' என்ற ஹாலிவுட் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் இணைந்துள்ளார். இப்படத்தை 'அவென்சர்ஸ்' படத்தை இயக்கிய பிரபல இயக்குனர்கள் ரூஸோ பிரதர்ஸ்  அந்தோணி மற்றும் ஜோ ரூசோ ஆகியோர் இயக்குகின்றனர்.

 மேலும் இந்த திரைப்படத்தில் நடிகர் தனுஷுடன் இணைந்து ஜெசிக்கா ஹென்விக், வாக்னர் மோரா, ஜூலியா பட்டர்ஸ், கிறிஸ் இவான்ஸ், ரியான் கோஸ்லிங், அனா டி ஆர்மஸ் உள்ளிட்ட பல ஹாலிவுட் நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். இந்நிலையில் இதனை தனுஷ் உறுதி செய்த நிலையில் அவரது ரசிகர்கள் கொண்டாடினர்.

இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் அமெரிக்காவில் தொடங்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் கலிபோர்னியா மாகாணத்தில் தற்போது கரோனா அதிக அளவில் அதிகரித்து வரும்நிலையில் பிரமாண்டமாக உருவாகவிருக்கும் இப்படத்தின் ஷூட்டிங் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.


Advertisement