ரிலீசுக்கு முன்பே கோடிகளை அள்ளும் தனுஷின் 'கேப்டன் மில்லர்'.!

ரிலீசுக்கு முன்பே கோடிகளை அள்ளும் தனுஷின் 'கேப்டன் மில்லர்'.!



Dhanush captain Miller movie release and OTT High money

தனுஷின் கேப்டன் மில்லர் திரைப்படத்தின் வெளியிட்டு உரிமை மற்றும் ஓடிடி உரிமை அதிக கோடிக்கு விற்பனையாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Dhanush

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருப்பவர் தனுஷ். தற்போது இவர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படத்தில் தனுஷ், பிரியங்கா அருள் மோகன், சந்திப் கிஷன் மற்றும் சிவராஜ் குமார் ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தை சத்தியஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க, ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் வரும் டிசம்பர் 15ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

Dhanush

இதனிடையே இந்தப் படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிலையில் தனுஷின் கேப்டன் மில்லர் திரைப்படத்தின் வெளியீட்டு உரிமை மற்றும் ஓடிடி உரிமை அதிக கோடிக்கு விற்பனையாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.