அவங்க சொன்னதெல்லாம் பொய்.! என் மகள் இப்படிதான்.! பிக்பாஸ் தனலட்சுமி அம்மா கூறியதை பார்த்தீங்களா!!

அவங்க சொன்னதெல்லாம் பொய்.! என் மகள் இப்படிதான்.! பிக்பாஸ் தனலட்சுமி அம்மா கூறியதை பார்த்தீங்களா!!


dhanalakshmi-reveals-the-truth-about-his-daughter

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற நிகழ்ச்சி பிக்பாஸ் சீசன் 6. இதில் பொதுமக்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டு தேர்ந்தெடுக்கப்பட்ட போட்டியாளராக வீட்டிற்குள் நுழைந்தவர் தனலட்சுமி. இவர் ஒவ்வொரு டாஸ்கிலும் மிகவும் ஆக்ரோஷமாகவும், அனைவரிடமும் சண்டை போட்டு விளையாடி பிரபலமாகியுள்ளார்.இவர் டிக்டாக் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர்.

இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் தனது தந்தையை பிரிந்து வாழ்வதாகவும், தாய் மிகவும் கஷ்டப்பட்டு வளர்த்தாகவும் தெரிவித்து இருந்தார் மேலும் பிக்பாஸ் வருவதற்கு கூட கடன் வாங்கியே தான் உடைகளை வாங்கியதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் சமீபத்தில் ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்த அவரது நண்பர்கள், தனலட்சுமியின் அம்மா துணிக்கடை வைத்துள்ளார். ஃபைனான்ஸ் தொழிலும் செய்து வருகிறார். அவருக்கு அப்பாவும் இருக்கிறார். அவருடன் சேர்ந்துகூட தனலட்சுமி டிக்டாக் வீடியோ வெளியிட்டுள்ளார். அவர் மெக்கானிக் கடை வைத்துள்ளார்.  தனலட்சுமி செருப்பே 12 ஆயிரம் ரூபாய்க்குதான் வாங்குவார். எப்பொழுதும் மற்றவர்களிடம் கோபப்படுவார். அவர் பிக்பாஸில் கலந்து கொண்டதற்கு பிறகு நாங்கள் பிக்பாஸ் நிகழ்ச்சியே பார்ப்பதில்லை எனக் கூறியுள்ளனர்.

bigboss

இந்நிலையில் இதுகுறித்து தனலட்சுமியின் அம்மா, அவளுக்கு நண்பர்கள் கிடையாது. அந்த நபர்கள் கூறிய அனைத்தும் பொய். தனலட்சுமியின் இயல்பான குணமே கோபப்படுவதுதான். அவளுக்கு 21 வயதுதான் ஆகிறது. விரைவில் எல்லாம் புரிந்துகொள்வாள். அவளிடமும் நிறைய நல்ல குணங்கள் உள்ளது. எங்களிடம் லட்சக்கணக்கிலெல்லாம் பணம் இல்லை. எங்களுக்கு 80 லட்சம் கடன் உள்ளது என கூறியுள்ளார்.