மெட்டி ஒலி புகழ் விஜயராஜ் மறைவிற்கு இதுதான் காரணமா? கண்ணீர்விடும் உறவினர்கள்!
மெட்டி ஒலி புகழ் விஜயராஜ் மறைவிற்கு இதுதான் காரணமா? கண்ணீர்விடும் உறவினர்கள்!

தற்போது வெள்ளித்திரையை விட சின்னத்திரை ரசிகர்கள் அதிகமாகிவிட்டனர். சிறுவர்கள் தொடங்கி, பெரியவர்கள் வரை அனைவரும் சீரியல் பார்க்க ஆரம்பித்துவிட்டனர். சீரியல் என்றாலே அதற்கு பெயர் போனது நம்ம சன் டிவி தான்.
சில்வருடங்களுக்கு முன்பு சன் டீவியில் ஒளிபரப்பாகி மாபெரும் வெற்றிபெற்ற தொடர் மெட்டி ஒலி. இதில் சோகமான விஷயம் என்னவென்றால் மெட்டி ஒளி சீரியலில் நடித்த விஜய்ராஜ் மாரடைப்பால் நேற்று மரணமடைந்தார்.
சமீபகாலமாக சீரியல், பட வாய்ப்புகள் சரிவர கிடைக்காததால் மன அழுத்தத்தில் இருந்ததாகச் சொல்கிறார்கள் உறவினர்கள். சில மாதங்களுக்கு முன் டிவி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு அது குறித்துப் பேசிய போது கண் கலங்கியிருக்கிறார்.
இந்த மன அழுத்தமே அவரது மறைவிற்கு காரணமாகிவிட்டதாக உறவினர்கள் வருத்தம் தெரிவித்தனர்.