சினிமா

பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுக்கு கொரோனா தொற்று உறுதி! மருத்துவமனையில் அனுமதி! அவரே வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

Summary:

Corono positive to bollywood actor amitabh bachan

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவி  நாளுக்கு நாள் அசுர வேகத்தில் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்தபாடில்லை.சாமானிய மக்கள் முதல் அரசியல்வாதிகள், திரைப்பிரபலங்கள்,  தொழிலதிபர்கள் என பலரையும் கொரோனா வைரஸ் பெருமளவில் பாதித்து வருகிறது.

இந்நிலையில் பாலிவுட் சினிமாவின் சூப்பர் ஸ்டாரான நடிகர் அமிதாப்பச்சனுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது  உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து அவர் மும்பையில் நானாவதி மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளார். மேலும் அவரது குடும்பத்தினர் அனைவருக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

இந்நிலையில் இதுகுறித்து நடிகர் அமிதாப் பச்சன் தனது டுவிட்டர் பக்கத்தில், எனக்கு சோதனையில் கொரோனா பாசிட்டிவ் வந்துள்ளது. 
மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளேன். மருத்துவமனை, அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளனர்.  குடும்பத்தினர் மற்றும் மற்ற பணியாளர்களுக்கு சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இன்னும் அதன் முடிவுகள் வரவில்லை. கடந்த 10 நாட்களில் என்னை சந்தித்தவர்கள் மற்றும் அருகில் வந்தவர்கள் தயவு செய்து கொரோனா சோதனை செய்து கொள்ளுங்கள் என அமிதாப் பச்சன் கூறியுள்ளார்.


Advertisement