யாஷிகாவையும் விட்டு வைக்கலையா.. கூல் சுரேஷ் மேடையில் செய்த செயல்.? முகம் சுளித்த பத்திரிக்கையாளர்கள்.!

யாஷிகாவையும் விட்டு வைக்கலையா.. கூல் சுரேஷ் மேடையில் செய்த செயல்.? முகம் சுளித்த பத்திரிக்கையாளர்கள்.!


cool-suresh-miss-behaved-actress-yashika

2001ஆம் ஆண்டு வெளியான "சாக்லேட்' படத்தில் அறிமுகமானவர் கூல் சுரேஷ். இவர் தொடர்ந்து ஸ்ரீ, காதல் அழிவதில்லை, திருடா திருடி, காக்க காக்க, ஆயுத எழுத்து போன்ற படங்களில் துணை நடிகராகவும், காமெடி கேரக்டர்களிலும் நடித்துள்ளார்.

yashika

தற்போது இவர் படத்தயாரிப்பாளராகவும் இருக்கிறார். இந்நிலையில், இவர் சமீபத்தில் வெளியான "மார்க் ஆண்டனி" படத்தைப் பார்த்து விட்டு வெளியே வந்து, கையில் பாம்பு பொம்மையை வைத்துக்கொண்டு "விஷாலின் அனகோண்டாவிற்கு முத்தம் கொடுத்துவிட்டேன்" என்று முகம் சுளிக்கும்படி பேசினார்.

முன்னதாக ஒரு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட கூல் சுரேஷ், நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய பெண்ணின் கழுத்தில் மாலையிட்டு, அவரை சங்கடத்திற்குள்ளாக்கினார். இந்நிலையில், ஒரு மேடை நிகழ்ச்சியில் யாஷிகாவின் கையைப் பிடித்து தடவிக் கொடுத்துள்ளார்.

yashika

இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி, அனைவரையும் முகம் சுளிக்க வைத்துள்ளது. தொடர்ந்து கூல் சுரேஷ், இவ்வாறான பல முகம் சுளிக்க வைக்கும் செயல்களை பொதுவெளியில் செய்து வருவதை மக்கள் அனைவரும் அருவருப்பாக பேசி வருகின்றனர்.