குக் வித் கோமாளி புகழின் ஜூ கீப்பர் திரைப்படம்; வெளியீடு தேதி அறிவிப்பு.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்.!cook-with-comali-pugazh-zoo-keeper-movie-release-on-may

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரபலமான நடிகர் புகழ் (Cook with Comali Pugazh). 

இவர் சுரேஷ் இயக்கத்தில், யுவன் சங்கர் ராஜா இசையில் உருவான ஜு கீப்பர் (Zoo Keeper) என்ற படத்தில் நடித்து வந்தார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்புடன் நடைபெற்று வந்தது.

தற்போது படம் வெளியீடுக்கு தயாராகி வரும் நிலையில், இப்படம் மே மாதம் 03 ம் தேதி திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்திய சினிமா வரலாற்றில், இப்படத்தில் நிஜ விலங்குகள் உபயோகம் செய்யப்பட்டு படப்பிடிப்பு நடத்தப்பட்டதாக படக்குழு அறிவித்துள்ளது. 

இப்படத்தை எதிர்பார்த்து புகழின் ரசிகர்கள் பலரும் காத்திருக்கின்றனர். அவர்களுக்கு படக்குழுவின் அறிவிப்பு மகிழ்ச்சியை தந்துள்ளது.