சினிமா

அட.. இனி செம பிஸிதான்! குக் வித் கோமாளி புகழுக்கு அடித்த அதிர்ஷ்டத்தை பார்த்தீர்களா! வைரலாகும் புகைப்படம்!!

Summary:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ஹிட்டான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன்

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ஹிட்டான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் புகழ். இவருக்கு என ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. மேலும் இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு புகழுக்கு ஏராளமான பட வாய்ப்புகளும் குவிந்து வருகிறது. இந்நிலையில் புகழ் காசேதான் கடவுளடா படத்தின் ரீமேக்கிலும் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

1972ம் ஆண்டு லட்சுமி, மனோரமா, முத்துராமன், தேங்காய் சீனிவாசன், வெண்ணிற ஆடை மூர்த்தி என பலரது நடிப்பில் வெளிவந்து ஹிட்டான  திரைப்படம் காசேதான் கடவுளடா. இந்நிலையில் இப்படத்தை இயக்குனர் ஆர். கண்ணன் ரீமேக் செய்யும் முயற்சியில் ஈடுபடுகிறார். இதில் மிர்ச்சி சிவா முத்துராமன் கதாபாத்திரத்திலும், யோகி பாபு தேங்காய் சீனிவாசன் கதாபாத்திரத்திலும் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் இப்படத்தில் பிரியா ஆனந்த், சிவாங்கி, கருணாகரன், ஊர்வசி, மனோபாலா உள்ளிட்ட பலரும் நடிக்கவுள்ளதாக அறிவுப்புகள் வெளியானது. இந்த நிலையில் தற்போது காசேதான் கடவுளடா படத்தில் குக் வித் கோமாளி புகழும் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்நிலையில் புகழ் படக்குழுவினரிடம் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது.


Advertisement